செய்திகள்

லியோ: இரட்டை வேடத்தில் விஜய்?

லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

DIN


லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா,  சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன்  ஆகியோர் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக லோகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தொடர்ந்து, ஹைதராபாத்தில் இறுதிகட்ட படப்பிடிப்புக்கு பிறகு அக்டோபர் 19-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களின் கதை திரைக்கு வரும் வரை ரகசியம் காக்கப்படுவது வழக்கம். இதேபோல், லியோ படத்தின் கதையையும் மிக ரகசியமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வைத்துள்ளார். லியோ படம் எல்சியூ-வில் வருமா என்ற தகவலைகூட இதுவரை கசியவிடவில்லை.

இந்நிலையில், லியோவில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், லியோ என்ற கதாபாத்திரத்துக்கு நடிகை த்ரிஷாவும், பார்த்திபன் என்ற கதாபாத்திரத்துக்கு நடிகை பிரியா ஆனந்த்தும் ஜோடியாக நடித்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இருப்பினும், படக்குழு தரப்பில் இருந்து இதுகுறித்த எந்த தகவலும், விளக்கமும் அளிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT