முகப்பு
செய்திகள்

பிச்சைக்காரன் -2 படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு

பிச்சைக்காரன் 2 படத்தின் முன்னோட்டக் காட்சியை படக்குழுவினர் இன்று மாலை வெளியிட்டுள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:57 PM
பகிர்:

பிச்சைக்காரன் 2 படத்தின் முன்னோட்டக் காட்சியை படக்குழுவினர் இன்று மாலை வெளியிட்டுள்ளனர்.

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ், தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்துள்ளார் விஜய் ஆண்டனி.

இந்தப் படம் வருகிற மே 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் குழுமம் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், யோகி பாபு நடித்துள்ள முன்னோட்டக் காட்சியை படக்குழுவினர் யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.