பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்ற 'சின்னஞ்சிறு நிலவே' விடியோ பாடல் வெளியாகியுள்ளது.
எழுத்தாளா் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநா் மணிரத்னம், இரு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்கிய படம் ‘பொன்னியின் செல்வன்’. இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், காா்த்தி, திரிஷா, ஐஸ்வா்யா ராய், சரத்குமாா், பாா்த்திபன் உள்ளிட்ட மிகப் பெரிய நடிகா்கள் பட்டாளமே நடித்திருந்தது.
ஏ.ஆா்.ரகுமானின் இசையமைத்திருந்தார். முதல் பாகம், கடந்த ஆண்டு செப்.30-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. முதல் பாகத்தை தொடா்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது.
வெளியான 10 நாள்களில் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் படத்தில் இடம்பெற்ற 'சின்னஞ்சிறு நிலவே' விடியோ பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.