செய்திகள்

கவனம் ஈர்க்கும் ஷாருக்கானின் டன்கி டீசர்!

ஷாருக்கான் நடிக்கும் டன்கி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

DIN

ஷாருக்கான் நடிக்கும் டன்கி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் அட்லி, ஷாருக்கான் கூட்டணியில் உருவான ஜவான் திரைப்படம் செப்.7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

கலவையான விமரிசனங்கள் பெற்றாலும் உலகளவில் ரூ.1200 கோடியை வசூலித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ஜவான் திரைப்படம்.

பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படம் டன்கி. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார்.

மேலும், இப்படத்தில் விக்கி கெளஷல், சதீஷ் ஷா, தியா மிர்சா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், ஷாருக்கானின் 58வது பிறந்த நாளையொட்டி, டன்கி படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஷாருக்கானின் பதான், ஜவான் படங்களைத் தொடர்ந்து, டன்கி திரைப்படமும் அதிக வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT