செய்திகள்

வெளியானது இந்தியன் - 2 அறிமுக விடியோ!

இந்தியன் - 2 படத்தின் அறிமுக விடியோவை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

DIN

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இதில், கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர். 

லைகா பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. எனவே, படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டு வர படக் குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

இந்நிலையில், இன்று இந்தியன் - 2  தமிழ் அறிமுக விடியோவை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். அதேபோல் மலையாளத்தில் மோகன் லால், தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமௌலி, கன்னடத்தில் கிச்சா சுதீப், ஹிந்தியில் அமீர் கான் ஆகியோரும் வெளியிட்டுள்ளனர். விடியோவின் இறுதியில், இந்தியன் வந்துவிட்டார் என்கிற கமலின் வசனத்தை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT