செய்திகள்

கருப்பா இருந்தா கேவலமா உங்களுக்கு?: வெளியானது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டிரைலர்

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.  

DIN

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். 
இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி முடித்துள்ளார். இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். மலையாள நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடித்துள்ளார். 
மேலும் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் பைவ் ஸ்டார் கதிரேசனுடன் இணைந்து படத்தை தயாரித்துள்ளார். படம் தீபாவளியையொட்டி நவம்பர் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. 
ஏற்கெனவே படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT