செய்திகள்

கொட்டும் மழையில் காத்திருந்த ரசிகர்கள்: படத்தின் மறுவெளியீட்டுக்கு இவ்வளவு வரவேற்பா?

கேரளத்தில் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ள படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

DIN

30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகியுள்ள மலையாள படத்தைக் காண கேரளத்தில் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

1993-ம் ஆண்டு இயக்குநர் பாசில் இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா, சுரேஷ் கோபி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் மணிச்சித்திரதாழ். இந்தப் படம் கேரளீயம் 2023 நிகழ்வின் ஒரு பகுதியாக மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. 

கேரளாவின் பண்பாட்டைக் கொண்டாடும் வகையில் கேரள அரசு ஒருங்கிணைக்கும் நிகழ்வு கேரளீயம் 2023. இந்நிகழ்வுக்காக மலையாள கிளாசிக் திரைப்படங்கள் மீண்டும் திரையிடப்பட்டு வருகின்றன.

மணிச்சித்திரதாழ் படத்தைக் காண ரசிகர்கள் கொட்டும் மழை என்றும் பாராமல் திரையரங்குகளில் வரிசையில் காத்திருக்கின்றனர்.

படத்தைக் காண வந்திருந்த ரசிகர்கள்

வெள்ளிக்கிழமை (அக்.3) மாலை 7:30 மணி திரையிடலுக்கு இருக்கைகள் எண்ணிக்கையை விட மக்கள் அதிகமாக குவிந்ததால் 9.15 மணிக்கு மற்றுமொரு திரையிடல் ஏற்பாடு செய்யப்பட்டது. ரசிகர்கள் சிலர் திரையரங்குகளின் படிக்கட்டுகளில் அமர்ந்தும் படத்தை பார்த்து ரசித்தனர்.

இந்தத் திரைப்படம் புகழ்பெற்ற படம் மற்றும் சிறந்த நடிகை ஆகிய இரு பிரிவுகளில் தேசிய விருது பெற்றது. இதனை தழுவி தமிழில் உருவாகிய படமே சந்திரமுகி என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாவூா்சத்திரம் ரயில் நிலையத்தின் 123 வது பிறந்த நாள் விழா. இசையமைப்பாளா் பரத்வாஜ் பங்கேற்பு.

பெயிண்டா் தற்கொலை

நயினாரகரம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ரத்தினம் பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ கிளஸ்டா் கால்பந்து போட்டி

நாளைய மின்தடை: தேவனூா்புதூா்

SCROLL FOR NEXT