செய்திகள்

கமல் - 234 போஸ்டரில் இருக்கும் வரிகள்!

DIN

நடிகர் கமல்ஹாசனின் 234-வது படத்தின் அப்டேட் போஸ்டரில் இருக்கும் பாரதியின் வரிகள் தற்போது கவனம்ஈர்த்து வருகின்றது.

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.

ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவில் அறிமுக முன்னோட்ட விடியோவின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த விடியோ கமலின் பிறந்த நாளான நவ.7-ல்(நாளை) வெளியாகவுள்ளது.

இதற்கு முன்னதாக இன்று மாலை 5 மணிக்கு படத்தின் பெயர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்து ராஜ் கமல் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த போஸ்டரின் பின்னணியில்,

“காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்

வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன்-நல்ல
வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்யித் துதிக்கிறேன்

மூலா வென்று கதறிய யானையைக் காக்கவே-நின்தன் முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ, கெட்ட மூடனே?

ஆலால முண்டவனடி சரணென் றமார்க்கண்டன்-தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன்-இங்கு

நாலாயிரம் காதம் விட்டகல்! உனை விதிக்கிறேன்-ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்

காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்.” என்ற பாரதியின் வரிகள் இடம்பெற்றுள்ளன.

‘மிரர் இமேஜ்’ முறையில் போஸ்டரில் இடம்பெற்றுள்ள இந்த வரிகள் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனக் கலவரம்: மணிப்பூரில் 67,000 போ் இடப்பெயா்வு

மே 31- வரை திருப்பதி விரைவு ரயில்கள் ரேணிகுண்டாவுடன் நிறுத்தம்

7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! 200 மி.மீ. வரை பெய்ய வாய்ப்பு

‘இந்தியா’ கூட்டணி வென்றால் வெளியிலிருந்து ஆதரவு: மம்தா

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

SCROLL FOR NEXT