செய்திகள்

கமல் 234: படத்தின் பெயர் இன்று மாலை அறிவிப்பு!

கமல் 234 படத்தின் பெயர் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

DIN

கமல் 234 படத்தின் பெயர் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமலுக்கான மார்கெட் மீண்டும் அதிகரித்துள்ளது.  கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.

ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவில் அறிமுக முன்னோட்ட விடியோவின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த விடியோவை கமலின் பிறந்த நாளான நவ.7-ல்(நாளை) வெளியிட உள்ளனர்.

இந்த நிலையில், படத்தின் பெயரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT