படம்: இன்ஸ்டாகிராம் | அனுமோல் 
செய்திகள்

முதல் பட அனுபவம் பகிர்ந்த நடிகை அனுமோள்! 

மலையாள நடிகை அனுமோள் தனது முதல்படம் குறித்த அனுபவத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

DIN

மலையாள நடிகை அனுமோள் தமிழில் ஒருநாள் இரவில், ஃபர்ஹானா ஆகிய படங்களின் மூலமும் அயலி எனும் இணையதொடர் மூலமாகவும் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். 

படம்: இன்ஸ்டாகிராம் | அனுமோல்

யோகா செய்வதில் ஆர்வம் உடையவர் அனுமோள். பரதநாட்டியம் ஆடுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதால் அடிக்கடி நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவார். 

படம்: இன்ஸ்டாகிராம் | அனுமோல்

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் அனுமோளுக்கு இன்ஸ்டாகிராமில் தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். 

படம்: இன்ஸ்டாகிராம் | அனுமோல்

2012இல் பி.பாலசந்திரன் இயக்கத்தில் வெளியான ‘இவன் மேகரூபன்’ எனும் படத்தில் தங்கமணி கதாபாத்திரத்தில் அனுமோள் நடித்திருந்தார். இந்தப்படம் மலையாள கவிஞர் பி. குஞ்ஞிராமன் நாயர் வாழ்க்கை வரலற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.  

படம்: இன்ஸ்டாகிராம் | அனுமோல்

இந்தப் படத்தில் அனுமோள் கிராமத்து பாடகியாக நடித்திருந்தார். இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது: 

படம்: இன்ஸ்டாகிராம் | அனுமோல்

என்னுடைய முதல் படமாகவும் பி.பாலசந்திரன் இயக்கத்திலும் வெளியான ‘இவன் மேகரூபன்’ படத்தில் தங்கமணி என்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் ஆகும். தங்கமணி நிஜ வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட கிராமத்து பாடகி கதாபாத்திரம் ஆகும். இந்தப் படத்தின் மூலம் பல அற்புதமான கலைஞர்களுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இது முற்றிலும் ஒரு கற்றல் அனுபவமாக அமைந்தது” எனக் கூறியுள்ளார். 

தற்போது அனுமோள் தமிழின் மூத்த நடிகர் மோகனின் ஹரா படத்தில் நடித்து முடித்துள்ளார். முதலில் குஷ்பு நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் அனுமோள் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

ஆந்திரத்தில் இருந்து மணல் கடத்தல்: 3 போ் கைது

வேலூா் அருகே பலத்த பாதுகாப்புடன் முருகா் சிலை மீட்பு

SCROLL FOR NEXT