முகப்பு
செய்திகள்

ஜப்பான் - நம்பிக்கையில் படக்குழு!

ஜப்பான் படத்தின் மீது படக்குழு அதிக நம்பிக்கையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:18 AM
பகிர்:

ஜிப்ஸி படத்துக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜப்பான்’. இதில் கார்த்தி நாயகனாகவும், அனு இமானுவேல் நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.

திருச்சியில் நடந்த உண்மை சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு ஜப்பான் திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் நவ.10 ஆம் தேதி வெளியாகிறது.

சமீபத்தில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இயக்குநர் ராஜு முருகனும் படக்குழுவும் இப்படத்தின் மீது அதிக நம்பிக்கையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக, கார்த்தியின் கதாபாத்திரம் கண்டிப்பாக பேசப்படும் என்பதே படக்குழுவின் எதிர்பார்ப்பாக இருக்கிறதாம்! 

முழு கட்டுரையைப் படிக்க →