முகப்பு
செய்திகள்

கமல் பிறந்தநாள்: இந்தியன் - 2 புகைப்படத்தை வெளியிட்ட ஷங்கர்!

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியன் - 2 புகைப்படத்தைப் பகிர்ந்தார் இயக்குநர் ஷங்கர்.

செய்திகள்

கமல் பிறந்தநாள்: இந்தியன் - 2 புகைப்படத்தை வெளியிட்ட ஷங்கர்!

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியன் - 2 புகைப்படத்தைப் பகிர்ந்தார் இயக்குநர் ஷங்கர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:18 AM
பகிர்:

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இதில், கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர். 

லைகா பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. எனவே, படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டு வர படக் குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

மேலும், இந்தியன் - 2  அறிமுக விடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், கமல்ஹாசனின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் ஷங்கர் இந்தியன் - 2 படப்பிடிப்பு புகைப்படத்தைப் பகிர்ந்து, “உங்களுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து, பலருக்கும் நீங்கள் முன்னுதாரணமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு என் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

வயதான தோற்றத்தில் இருக்கும் கமல்ஹாசனின் இப்படம் வைரலாகி வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →