செய்திகள்

நடிகர் ரஜினி மறுத்த கதையில் சிம்பு!

சிம்பு 48 படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி நடிகர் ரஜினிகாந்த் மறுத்த கதையில்தான் தற்போது சிம்பு நடிக்க உள்ளதாக கூறியுள்ளார். 

DIN

நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் 48வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தினை கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். 

சமூக வலைதளங்களில் சிம்பு 48 படத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் இந்திய படமாக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு ரூ.100 கோடி பட்ஜெட் ஆகுமென தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தீபிகா படுகோன் கதாநாயகியாக இருந்தால் பொருத்தமாக இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இந்நிலையில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி நேர்காணல் ஒன்றில், “இந்தப் படத்தின் கதையை முதலில் ரஜினி சாருக்கு சொன்னேன். அவர் நடிக்கவில்லை. பின்னர் இதே கதையைதான் எந்த மாற்றமும் இல்லாமல் சிம்பு சாரிடம் கூறினேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.  இந்தப் படத்தில் மிகுந்த கவனமாக நடிக்க சிம்பு சார் பல பெரிய படங்களில் நடிக்க மறுத்துள்ளார். 

இதையும் படிக்க: சித்தா: ஓடிடி அறிவிப்பு! 

இந்தப் படத்துக்காக நடிகர் சிம்பு, புதிய சண்டைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு கெட்டப்புகளில் நடிக்க உள்ளார். விரைவில் கதாபாத்திரங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும். அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகும்” எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிடிஇஏ பள்ளியில் தமிழ் கலை இலக்கியப் பெருவிழா

மோடி பிறந்த நாளில் தில்லியில் 41 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்தகங்கள் திறப்பு

மேம்பட்ட மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை: தில்லி முதல்வா்

டியுஎஸ்யு தோ்தல் பிரசாரத்தின்போது ஏபிவிபி, என்எஸ்யுஐ அமைப்பினா் மோதல்

தில்லி பிஎம்டபிள்யு விபத்து: முக்கிய குற்றவாளி மது அருந்தவில்லை என பரிசோதனையில் தகவல்

SCROLL FOR NEXT