நடிகை நயன்தாரா அவர் நடிக்கும் டெஸ்ட் திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் படத்தில் நடிகர்கள் மாதவன் மற்றும் சித்தார்த் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஒய்நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது. மண்டேலா திரைப்படத்தின் தயாரிப்பாளாரான சஷிகாந்த் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், படத்தை திரையிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ஒன் 2 ஒன் படத்தின் புதிய போஸ்டர்!
இந்த நிலையில், நடிகை நயன்தாரா டெஸ்ட் படக்குழுவுக்கு தீபாவளி வாழ்த்துகளை எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.