செய்திகள்

இறுதிக் கட்ட படப்பிடிப்பில் விஜய் சேதுபதி 51!

நடிகர் விஜய் சேதுபதி நடித்துவரும் அவரது 51வது படம் குறித்த அப்டேட்டினை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

DIN

தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கில் கலக்கிவரும் விஜய் சேதுபதி தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். குரங்கு பொம்மை இயக்குநர் நிதிலன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது. பழிவாங்கும் கதையாக உருவாகிவரும் இந்தப் படத்தில் இரண்டு புதிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. 

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குநர் ஆறுமுகக்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதிய படத்தில் நடிக்கிறார். 7சிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததுள்ளதாக கடந்த ஜூனில் படக்குழு தெரிவித்திருந்தது. படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்காலிகமாக ‘விஜேஎஸ்51’எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

இந்தப்படத்தில் ருக்மணி, யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்களை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. ஜஸ்டின் பிராபகரன் இசையமைக்க உள்ளார். 

இந்நிலையில் விஜய் சேதுபதியின் 51வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தீபாவளி வாழ்த்து தெரிவித்த படக்குழு இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது. 

விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் படம் டிச.15ஆம் தேதி வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு வழங்கினாா்

ஜூடோ போட்டிகளில் பதக்கங்கள் குவித்த அரசுப் பள்ளி மாணவா்கள்: மாநகராட்சி ஆணையரிடம் வாழ்த்து

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

SCROLL FOR NEXT