செய்திகள்

அஜயன் பாலாவின் மைலாஞ்சி படப்பிடிப்பு நிறைவு!

அஜயன் பாலா இயக்கத்தில் உருவாகும் மைலாஞ்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது

DIN

திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என பன்முகத் திறமை கொண்ட அஜயன் பாலா புதிய படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தின் பூஜை அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

மலைப் பிரதேசத்தின் பின்னணியில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை பேசும் காதல் கதையான  'அஜயன் பாலாவின் மைலாஞ்சி' காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் வெளியாக திட்டமிடப்பட்டு படப்பிடிப்பு துவங்கப்பட்டது. 

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளார். செழியன் ஒளிப்பதிவில், ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகும் 'அஜயன் பாலாவின் மைலாஞ்சி' திரைப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குருப், யோகி பாபு, முனீஷ்காந்த், சிங்கம்புலி மற்றும் தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ் திரை உலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் அஜயன் பாலா, 'சித்திரம் பேசுதடி', 'பள்ளிக்கூடம்', 'மதராசபட்டினம்', 'தெய்வத்திருமகள்', 'மனிதன்', 'சென்னையில் ஒரு நாள்', 'லக்ஷ்மி', 'தலைவி', உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய பங்காற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

2017ம் ஆண்டு வெளிவந்த 'ஆறு அத்தியாயம்' திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கி உள்ள அஜயன் பாலா, தற்போது 'அஜயன் பாலாவின் மைலாஞ்சி' திரைப்படத்தின் மூலம் முழு நீள திரைப்படம் ஒன்றை முதல் முறையாக எழுதி இயக்கியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டையன் பதவி பறிப்பு: இபிஎஸ்ஸின் கோவை பிரசாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

குடியரசு துணைத் தலைவர் தோ்தல் வாக்குப் பதிவு தொடங்கியது! முதலில் வாக்களித்த மோடி!

அதிமுக கோமா நிலையில் உள்ளது: அமைச்சர் சேகர்பாபு

தங்கம் விலை இன்றும் அதிரடி உயர்வு: 81 ஆயிரத்தைக் கடந்தது!

செப். 11 இல் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் பங்கேற்பு

SCROLL FOR NEXT