செய்திகள்

நடிகராகும் இயக்குநர் சீனு ராமசாமி!

தமிழ் சினிமா இயக்குநர் சீனு ராமசாமி நடிகராக புதிய படத்தில் நடித்து வருகிறார்.

DIN

தமிழில் தனித்துவமான இயக்குநர் சீனு ராமசாமி. 2010இல் இவர் இயக்கிய தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

நீர்ப்பறவை, கண்ணே கலைமானே, தர்மதுரை, மாமனிதன் படங்களை இயக்கியுள்ளார். அடிதடி கமர்ஷியல் சினிமாவுக்குள் சிக்கிக் கொள்ளாமல் மனித உணர்வுகளை பிரதானமாக்கி படங்களை இயக்குவதில் ஆர்வம் உடையவர் சீனு ராமசாமி.

இவர் இயக்கிய இடம் பொருள் ஏவல் படம் இன்னும் வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆர்.விஜய் கார்த்திக் இயக்கும் ‘ஈக்வாலிட்டி’ படத்தில் நாயகனாக நடிக்கிறார். எஸ். தங்கராஜ் இந்தப் படத்தினை தயாரிக்கிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு சீனு ராமசாமி நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “நான் முழுமையான நடிகனில்லை. ஆனால் கற்றுக் கொண்டிருக்கிறேன். இதில் நடிகனாக என்னை முன்னேற்றிக் கொள்வேனா தெரியவில்லை. நமது சினிமாவில் எவ்வளவு அற்புதமான நடிகர்கள், நடிகைகள் இருக்கிறார்கள் எனத் தெரியும். இயக்குநர் எனக்கு நம்பிக்கையளித்தால் நடிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

அவர் இயக்கிய தர்மதுரை படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் சீனு ராமசாமி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT