செய்திகள்

நான் எந்தப் படத்தையும் காப்பியடிக்கவில்லை: அட்லி 

DIN

இயக்குநர் ஷங்கரின் துணை இயக்குநராக இருந்து தனது முதல் படமான ‘ராஜா ராணி’ மூலம் பிரபலமானவர் இயக்குநர் அட்லி. அடுத்து நடிகர் விஜய்யுடன் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். பின்னர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தினை இயக்கினார். 

ஜவான் திரைப்படம் ரூ.1140 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. அடுத்து ரூ.3000 கோடி வசூலிக்கும் படத்தினை இயக்க உள்ளதாக கூறியிருந்தார். நடிகர் விஜய், நடிகர் ஷாருக்கானை வைத்து படமெடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். 

ராஜா ராணி படத்தில் இருந்து கடைசியாக வெளியான ஜவான் படம் வரை அட்லி பல படங்களை  காப்பியடித்து எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் வைக்கப்படுகிறது. ஆனால் சட்ட ரீதியாக எதுவும் நிரூபணமாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில், “நான் எந்தப் படங்களையும் காப்பியடித்து எடுக்கவில்லை. அப்படி காப்பியடித்து இவ்வளவு வசூல் செய்யும் படங்களை எடுக்க முடியுமா? அப்படியானால் எல்லோரும் இதை எளிமையாக செய்து விடுவார்களே... அப்படியில்லை. நேர்மையற்ற உழைப்பினால் யாரும் எதையும் சாதிக்க முடியாது.

இப்படித்தான் மெர்சல் படம் காப்பியென ஒருவர் வழக்கு தொடர்ந்தார். பின்னர் நீதிபதி இருவரது படங்களின் ஸ்கிரிப்ட்டை ஆராய்ந்து அப்படி எதும் இல்லை எனக் கூறி வழக்கு பதிந்தவருக்கு அபராதம் வித்தித்தார். என்னை இன்ஸ்பையர் செய்த பல படங்களின் பாதிப்பு என்னுடைய படங்களில் இருக்கலாம் அதற்காக நான் காப்பியடித்தேன் எனக் கூற முடியாது. என்னுடைய படங்களுக்கு நான் கடுமையாக உழைத்து எழுதுகிறேன்” எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சாதனை

10-ஆம் வகுப்பு தோ்வு: நாமக்கல் குறிஞ்சிப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆராய்ச்சி மைய ஆண்டு விழா

திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவி சிறப்பிடம்

கோடைகால கலைப்பயிற்சி முகாம் நிறைவு: 160 மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

SCROLL FOR NEXT