செய்திகள்

அனுபவங்களைத் தாண்டிய பயணம்: சுந்தரி நாயகியின் வைரல் படங்கள்!

முதல் பாகம் 800 எபிஸோடுகளைக் கடந்து ஒளிபரப்பானது. தற்போது இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

DIN

சின்னத்திரை நடிகை கேப்ரியல்லா தீபாவளியையொட்டி வெளியிட்டுள்ள படங்கள் அவரின் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. 

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு சுந்தரி தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. சுந்தரி தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிகை கேப்ரியெல்லா நடித்து வருகிறார். 

சுந்தரி தொடரின் முதல் பாகம் நிறைவடைந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்தில் கணவனால் ஏமாற்றப்பட்ட கிராமத்துப் பெண் போராடி படித்து ஆட்சியராவதை கதைக்களமாக கொண்டு ஒளிபரப்பானது. 

இரண்டாம் பாகத்தில் ஆட்சியரான பின்பு ஏமாற்றப்பட்ட முதல் கணவனை சந்தித்து எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. 

கேப்ரியல்லாவுடன் ஸ்ரீகோபிகா, ஜிஷ்ணு உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். அழகர் இந்தத் தொடரை இயக்குகிறார்.

முதல் பாகம் 800 எபிஸோடுகளைக் கடந்து ஒளிபரப்பானது. தற்போது இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. எனினும் இரண்டிலுமே சுந்தரி தொடர் அதிக டிஆர்பி பெற்று டாப் 5 தொடர்களில் ஒன்றாக உள்ளது. 

நடிகை கேப்ரியல்லா சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். அவ்வபோது புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களுடன் உரையாடிவருவார். அந்தவகையில் தற்போது தீபாவளியையொட்டி அவர் வெளியிட்டுள்ள படங்களைப் பலரும் பகிர்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 

மற்ற நடிகைகளைப் போன்று வெறும் புகைப்டங்களுக்காக தயாராகாமல், வித்தியாசமான முறையில் தன்னைத் தயார் செய்துகொண்டு புகைப்படங்களை எடுத்து பதிவிட்டுள்ளார். அந்தப் படங்களைப் பலரும் பாராட்டி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

SCROLL FOR NEXT