செய்திகள்

நள்ளிரவில் வெளியான ஜோதிகா-மம்மூட்டியின் ‘காதல்’ பட டிரைலர்!

நடிகை ஜோதிகாவும் நடிகர் மம்மூட்டியும் இணைந்து நடித்துள்ள படத்தின் டிரைலர் நள்ளிரவில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமான நடிகை ஜோதிகாவின் பிறந்தநாளன்று புதிய படம் குறித்து அறிவிப்பு  வெளியானது. 

ஜோதிகா கடைசியாக 2021ஆம் ஆண்டு சசிகுமாருடன் நடித்த ‘உடன்பிறப்பு’ படம் வெளியானது. 

படத்திற்கு ‘காதல் தி கோர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தினை ஜியோ பேபி இயக்குகிறார். இவர் இயக்கத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. இதை தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் நள்ளிரவில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் இது குறித்து, “ஏன் நள்ளிரவில் வெளியானது புரியவில்லை. ஆனால் எதிர்பாராத மகிழ்ச்சியாக இருக்கிறது” எனக் கமெண்டில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்தப் படம் நவ.23ஆம் நாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

முதல்முறையாக புதுவையில் விஜய் சாலைவலம்! எப்போது?

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

SCROLL FOR NEXT