செய்திகள்

முதல் பிறந்தநாள்.. கணவரைக் கொண்டாடிய சீரியல் நடிகை!

நடிகை ஷபானா தனது கணவரும் நடிகருமான ஆர்யனின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

DIN

நடிகை ஷபானா தனது கணவரும் நடிகருமான ஆர்யனின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள படங்களுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

ஜீ தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரில் நாயகியாக நடித்தவர் நடிகை ஷபானா. அத்தொடரில் பார்வதி பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார். செம்பருத்தி தொடர் டிஆர்பியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

அதனைத் தொடர்ந்து தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மிஸ்டர் மனைவி தொடரில் நாயகியாக ஷபானா நடித்து வருகிறார். செம்பருத்தியில் கிடைத்த புகழால் மிஸ்டர் மனைவி தொடரும் டிஆர்பியில் டாப் 5 தொடர்களில் ஒன்றாக உள்ளது. 

நடிகை ஷபானா 2022ஆம் ஆண்டு நடிகர் ஆர்யனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு வரும் ஆர்யனின் முதல் பிறந்தநாளை (நவ. 16) ஷபானா சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

ஷபானா - ஆர்யன்

இது தொடர்பாக கணவர் ஆர்யனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில், என் வாழ்க்கையின் ஆணுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உன் மனைவியாக இருப்பதில் பெருமிதமடைகிறேன். இந்த வாக்கியத்திற்குள் மற்ற அனைத்துமே அடங்கிவிடும் எனப் பதிவிட்டுள்ளார். அவர்களுக்கு ரசிகர்கள், சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நடிகர் ஆர்யன் நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

முதல் டி20: இருவர் அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT