செய்திகள்

கயல், எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய சிங்கப் பெண்ணே தொடர்!

தமிழ் சின்னத்திரை தொடர்களில் அதிக டிஆர்பி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது சிங்கப்பெண்ணே தொடர்.

DIN

தமிழ் சின்னத்திரை தொடர்களில் அதிக டிஆர்பி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது சிங்கப் பெண்ணே தொடர்.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு சிங்கப்பெண்ணே தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. சிங்கப் பெண்ணே தொடரில் நடிகை மணீஷா மகேஷ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் அமல்ஜித், தர்ஷக் கெளடா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

மணீஷா மகேஷ்

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஆனந்தி என்ற பெண், தனது குடும்பத்தின் சுமைகளையும் பொருளாதாரத் தேவைகளையும் சரிசெய்ய கிராமத்திலிருந்து நகரத்துக்குச் செல்கிறார். அங்கு அவர் சந்திக்கும் பிரச்னைகளும் அதனை அவர் எதிர்கொள்ளும் சூழலும் திரைக்கதையாக அமைக்கப்பட்டு சிங்கப் பெண்ணே தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்தத் தொடரை தனுஷ் இயக்குகிறார். சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய கண்ணான கண்ணே தொடரை இயக்கியவர் இவர்தான்.

அக்டோபர் 9ஆம் தேதிமுதல் ஒளிபரப்பாகிவரும் சிங்கப் பெண்ணே தொடர், ஒளிபரப்பான ஒரே மாதத்தில் அதிக டிஆர்பி பெற்று முதலிடத்திலுள்ள தொடர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இதற்கு முன்பு கயல் தொடர், ஒளிபரப்பான முதல் மாதத்திலேயே முதலிடத்தைப் பிடித்திருந்தது. பின்னர் கயல் தொடரை பின்னுக்குத்தள்ளியது இயக்குநர் திருச்செல்வத்தின் எதிர்நீச்சல் தொடர்.

தற்போது எதிர்நீச்சல் தொடரை பின்னுக்குத்தள்ளி, சிங்கப் பெண்ணே தொடர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தத் தொடர் டிஆர்பி பட்டியலில் 10.28 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

அமைச்சர் பதவி வேண்டாம்: வருமானம் குறைந்துவிட்டது; சினிமாவில் நடிக்கப் போகிறேன்! - சுரேஷ் கோபி

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

இந்த வராம் கலாரசிகன் - 12-10-2025

SCROLL FOR NEXT