தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் பிசியாக நடித்து வந்த நயன்தாரா, முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் 1140 கோடி வசூலித்தது.
தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ள இறைவன் திரைப்படமும் சமீபத்தில் வெளியாகியது. மேலும், பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதையும் படிக்க: இசை மருத்துவர் யுவன் ஷங்கர் ராஜா: வைரல் விடியோ!
இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர்.
இதையும் படிக்க: சப்த சாகரதாச்சே எல்லோ: ரசிகர்களின் ஆதரவில் கூடுதல் காட்சிகள் !
அவர்களது குழந்தைகளுக்கு உயிர், உலக் என வித்தியாசமாக பெயரிட்டுள்ளார்கள்.
இந்நிலையில், நயன்தாராவின் 39வது பிறந்தநாளில் அவரது கணவர் விக்னேஷ் சிவன், “என் தங்கத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” எனக் கூறி குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.