செய்திகள்

த்ரிஷா குறித்த மன்சூர் அலிகானின் சர்சை பேச்சு: குவியும் கண்டனங்கள்!

லியோ திரைப்படத்தில் பாலியல் தொந்தரவு செய்யும் காட்சியே இல்லை என்று திரிஷா குறித்த மன்சூர் அலிகான் பேச்சுக்கு த்ரிஷா மற்றும் லோகேஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

DIN

லியோ திரைப்படத்தில் பாலியல் தொந்தரவு செய்யும் காட்சியே இல்லை என்று திரிஷா குறித்த மன்சூர் அலிகான் பேச்சுக்கு த்ரிஷா மற்றும் லோகேஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்கள் சந்திப்பில், லியோ திரைப்படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சிகள் அமைக்கப்படவில்லை என்று சர்சைக் கருத்தை தெரிவித்தார்.

மன்சூர் அலிகானின் இந்த சர்சை பேச்சு தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"மன்சூர் அலி கான் என்னைப் பற்றி கேவலமா பேசிய விடியோ என் கவனத்துக்கு வந்தது. இதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்" எனத் நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

"பெண்களைப் பற்றி இந்த மனிதர் கொண்டிருக்கும் எண்ணங்களை நினைத்துப் பார்க்கவே அவமானமாக உள்ளது" என நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

"மன்சூர் அலி கான் கூறிய கருத்துக்கள் எனக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் அனைவரும் ஒரே அணியில் பணியாற்றியுள்ளோம். பெண்கள், சக கலைஞர்கள் அனைவருக்கும் மரியாதை வழங்கப்பட வேண்டும்" என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

9 மாநில விருதுகளை வென்ற மஞ்ஞுமல் பாய்ஸ்!

சுற்றுலா தருணங்கள்... ரைசா வில்சன்!

SCROLL FOR NEXT