நடிகர் மன்சூர் அலிகான் (கோப்புப்படம்) 
செய்திகள்

மன்சூர் அலிகானுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்

நடிகை த்ரிஷா உள்ளிட்ட நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

DIN

நடிகை த்ரிஷா உள்ளிட்ட நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

லியோ படத்தில் நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து மிகவும் சர்ச்சையான கருத்துகளைக் கூறினார். மன்சூர் அலிகானின் இந்த கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. நடிகை த்ரிஷா, நடிகை மாளவிகா மோகனன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், சக நடிகர்களைப் பற்றி நகைச்சுவை என்ற பெயரில் தரக்குறைவாக பேசிய மன்சூர் அலிகானை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ அந்த ஊடகம் முன்பு உண்மை மனதுடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம். 

மேலும் இக்கீழ்செயல் காரணமாய்த் தன் தவறு உணர்ந்து, மனம் வருந்தி, உண்மையாக பொது மன்னிப்பு கூறும் வரை அவரை சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்கம் செய்யக்கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT