செய்திகள்

கிரிக்கெட்டில் தோற்றதால் அழுதுவிட்டேன்: இயக்குநர் செல்வராகவன்

கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதால் தான் அழுதுவிட்டதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

DIN

கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதால் தான் அழுதுவிட்டதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், நேற்று கிரிக்கெட்டில் தோற்ற பிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை. பாவம். அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடிய வில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அகமதாபாதில் நடைபெற்ற 13-ஆவது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்று, 6-ஆவது முறையாக சாம்பியன் கோப்பையை வென்றது. கோப்பையை வெல்லும் கனவுடன் இருந்த இந்திய அணி ஏமாற்றம் அடைந்தது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் இந்தியா 50 ஓவா்களில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 43 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்கள் சோ்த்து வென்றது. ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன், விராட் கோலி தொடா்நாயகன் விருது பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புயலுக்குப் பின் அழகு... தாப்ஸி!

சென்னை, 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!

ஒல்லியானவர்களுக்கு கல்லீரல் கொழுப்பு பாதிப்பு ஏற்படுவது ஏன்?

திருமண பந்தத்தில் இணைந்த சின்ன திரை நடிகர்!

ஆஷஸ் 2 வது டெஸ்ட்: பகலிரவு போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

SCROLL FOR NEXT