செய்திகள்

இஸ்லாமிய காவல்துறை அதிகாரியாக ரஜினி?

நடிகர் ரஜினிகாந்த் தன் புதிய படத்தில் இஸ்லாமிய காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

DIN

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இசை - அனிருத்.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாஸில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

நெல்லை, கன்னியாகுமரி, மும்பை பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்றது. தற்போது, சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இஸ்லாமிய காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ‘லால் சலாம்’ படத்திலும் ரஜினி இஸ்லாமியராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

SCROLL FOR NEXT