நடிகர் இந்திரன்ஸ் 
செய்திகள்

67 வயதில் 10-ம் வகுப்பு தேர்வுக்குத் தயாராகும் நடிகர்!

67 வயதான மலையாள குணச்சித்திர நடிகர் மீண்டும் தனது படிப்பைத் தொடர்ந்து வருகிறார்.

DIN

கல்விக்கு வயது அவசியமில்லை என்பது மலையாள நடிகர் இந்திரன்ஸ் செயலால் மற்றுமொரு முறை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இளமையில் வறுமையைச் சந்தித்ததால் அவரால் தொடர்ந்து படிக்க இயலவில்லை. நான்காம் வகுப்பு வரை படித்தவர், அதன் பிறகு பல்வேறு வேலைகளைப் பார்த்துள்ளார்.

1981-ல் துணி தைக்கும் நிலையத்தில் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆடை வடிவமைப்பில் வேலை செய்தவர், அதன் பிறகு நடிகராகத் தன்னை வளர்த்துக் கொண்டுள்ளார். 40 வருடங்களுக்கு மேலாகத் திரைத்துறையில் நடிகராக வலம்வருகிறார்.

மாநில அரசின் பல்வேறு விருதுகள், தேசிய விருது ஆகியவற்றை வென்றுள்ள இந்திரன்ஸ் தற்போது இளமையில் விட்டுப் போன படிப்பைத் தொடர முடிவு செய்து படித்து வருகிறார். 

தனது வீட்டிற்கு அருகிலுள்ள அரசுப் பள்ளியில் வார இறுதி வகுப்புகளுக்குச் சென்று பத்தாம் வகுப்பு தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.

படிப்பு இல்லாதது என்பது கண் பார்வை இல்லாததற்குச் சமம் எனச் சொல்லும் இவர், நடிகர் ஆசிப் அலி நடிக்கும் ஒட்டா படத்தில் நடித்துள்ளார். புள்ளி, நுனா, நடிகர் திலகம் உள்ளிட்ட பல முக்கிய படங்களில் இந்திரன்ஸ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT