செய்திகள்

யூடியூபில் மறுஒளிபரப்பாகும் 2 பிரபல தொடர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி மக்கள் மனங்களைக் கவர்ந்த இரு தொடர்கள் மீண்டும் மறுஒளிபரப்பு செய்யப்படவுள்ளன. 

DIN


விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி மக்கள் மனங்களைக் கவர்ந்த இரு தொடர்கள் மீண்டும் மறுஒளிபரப்பு செய்யப்படவுள்ளன. 

விஜய் தொலைக்காட்சி தனது யூடியூப் வலைதளத்தில் இரு தொடர்களையும் மறுஒளிபரப்பு செய்ய முடிவு செய்துள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் எடுக்கப்பட்டு வருகிறது.     அந்தவகையில் இளம் தலைமுறை ரசிகர்கள் மத்தியில் கடும் கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் உள்ளான பாரதி கண்ணம்மா தொடரை விஜய் தொலைக்காட்சி தனது யூடியூப் தளத்தில் மறுஒளிபரப்பு செய்யவுள்ளது. 

பாரதி கண்ணம்மாவின் இரண்டாம் பாகத்தை விட, முதல் பாகத்திற்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் உண்டு. தற்போது அந்த ரசிகர்களைக் கவரும் வகையில், மீண்டும் பாரதி கண்ணம்மா தொடர் மறுஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. 

இதேபோன்று விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மனங்களைக் கவர்ந்த தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தத் தொடரும் விஜய் தொலைக்காட்சி யூடியூப் பக்கத்தில் மறுஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ஆம் பாகம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT