செய்திகள்

துருவ நட்சத்திரம் வழக்கு: உறுதியளித்த கெளதம் வாசுதேவ் மேனன்!

DIN

துருவ நட்சத்திரம் திரைப்பட வெளியீடு தொடர்பான வழக்கில், ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ.2.40 கோடியை வரும் புதன்கிழமைக்குள்(நவ.29) கொடுக்கப்படும் என்று கெளதம் வாசுதேவ் மேனன் உறுதியளித்துள்ளார்.

துருவ நட்சத்திரம் திரைப்படத்தை வெளியிட தடைக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கெளதம் உறுதியளித்துள்ளார். மேலும், பணம் செலுத்திய பின்னரே துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கெளதம் வாசுதேவ் மேனன் பதில் குறித்த விசாரணை வரும் நவ.27 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சிம்பு நடிப்பில் சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்க ரூ.2.40 கோடியை  ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம்  கெளதம் வாசுதேவ் மேனன் பெற்றதாகவும் ஆனால், அப்படத்தை அவர் முடிக்கவில்லை என்று  பங்குதாரர் வழக்கு தொடர்ந்தார்.

இதனால், ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ.2 கோடியை திரும்ப அளிக்க வேண்டும் என்று  துருவ நட்சத்திரம் திரைப்பட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்தொகையை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவன பங்குதாரருக்கு இன்று கெளதம் வாசுதேவ் மேனன் பணம்  வழங்கததால் துருவ நட்சத்திரம் திரைப்பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT