செய்திகள்

தவறு செய்வது மனித இயல்பு: த்ரிஷா

நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகான் கேட்ட மன்னிப்புக்கு பதில் அளித்துள்ளார்.

DIN

நடிகை த்ரிஷா குறித்து நடிகா் மன்சூா் அலிகான் சா்ச்சைக்குரிய வகையில் அண்மையில் பேசினாா். இந்தப் பேச்சுக்கு திரைத் துறையில் இருந்து மட்டும் அல்லாமல் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும் எதிா்ப்புகளும் எழுந்தன.

மன்சூா் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு தேசிய மகளிா் ஆணையம் நவ.20-ஆம் தேதி பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், மன்சூா் அலிகான் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிா் காவல் துறையினர் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர்.

தொடர்ந்து, நேற்று (நவ.23) இன்று பிற்பகல் மன்சூர் அலிகான் விசாரணைக்காக, சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார்.

இன்று "எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன். " என அறிக்கை வாயிலாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகை த்ரிஷா தன் எக்ஸ் பக்கத்தில், “தவறு செய்வது மனிதம். மன்னிப்பது தெய்வீகம்” என மன்சூர் செயலுக்கு பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

SCROLL FOR NEXT