செய்திகள்

விஜய் ஆண்டனி நடிக்கும் வள்ளி மயில் பட டீசர் குறித்த அப்டேட்

விஜய் ஆண்டனி நடிக்கும் வள்ளி மயில் திரைப்படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. 

DIN

விஜய் ஆண்டனி நடிக்கும் வள்ளி மயில் திரைப்படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம். 'வள்ளி மயில்'. இதில், பாரதிராஜா, சத்யராஜ், ‘புஷ்பா’ சுனில், கயல் தேவராஜ், ஃபரியா அப்துல்லா, தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, அறந்தாங்கி நிஷா உட்பட பலர் நடிக்கின்றனர். 
டி.இமான் இசையமக்க படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. 1980 -களில் புகழ் பெற்ற 'வள்ளி திருமணம்' நாடகத்தை பின்னணியாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. 
மிகுந்த பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் டீசர் நவம்பவர் 28ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT