ஸ்வேதா - பாப்ரி கோஷ் 
செய்திகள்

பிரபல தொடரில் இணையும் பாண்டவர் இல்லம் நடிகை!

பாண்டவர் இல்லம் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்த பாப்ரி கோஷ், தற்போது சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடரில் நடிக்கவுள்ளார். இதனால், அவரின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

DIN

கண்ணெதிரே தோன்றினால் தொடரில் நடிகை பாப்ரி கோஷ் புதிதாக இணைந்துள்ளார். 
 
பாண்டவர் இல்லம் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்த பாப்ரி கோஷ், தற்போது சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடரில் நடிக்கவுள்ளார். இதனால், அவரின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு கண்ணேதிரே தோன்றினால் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தத் தொடரில் நடிகை மாளவிகா அவினாஷ் - ஸ்வேதா கெல்கே முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜே ஜே, ஆறு, ஆதி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் மாளவிகா நடித்துள்ளார். 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் வானத்தைப் போல தொடரில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை ஸ்வேதா. இவர்கள் இருவரும் நடித்துவரும் கண்ணெதிரே தோன்றினால் தொடரில், தற்போது நடிகை பாப்ரி கோஷ் இணைந்துள்ளார். 

கண்ணெதிரே தோன்றினால் தொடரில் நடிகை பாப்ரி கோஷ்

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பாப்ரி கோஷ், மாளவிகா போன்ற திறமைவாய்ந்தவருடன் நடிப்பதில் மிகுந்த ஆர்வமுடன் உள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ரவிச்சந்திரனுக்கு நன்றி. இந்தத் தொடருக்கான என்னுடைய சிறந்த நடிப்பை நான் வழங்குவேன் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

கண்ணெதிரே தோன்றினால் தொடரில், பாப்ரி கோஷ் கதாபாத்திரத்தின் முன்னோட்ட விடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT