முகப்பு
செய்திகள்

பெண் குழந்தைகளைத் தத்தெடுக்கும் சமந்தா?

நடிகை சமந்தா இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:26 AM
பகிர்:

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்கு பிறகு  ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.

யசோதா, சாகுந்தலம் படங்களைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்த குஷி உள்ளிட்ட படங்கள் அவருக்குப் பெரிதாக வெற்றிப்படமாக அமையவில்லை.

மேலும், மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சமந்தா 2 பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்த சமந்தா 2021-ல் விவாகரத்துப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →