முகப்பு
செய்திகள்

கல்கி படப்பிடிப்பில் கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன் கல்கி 2898 ஏடி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

Updated On : 19 மே, 2024 at 10:04 AM
பகிர்:

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம்  'கல்கி 2898 ஏடி'. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். 

ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டக்குபதி, கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில்  வெளியிட்டிருந்தனர்.

இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் கமல்ஹாசன், கல்கி படப்பிடிப்பில் கலந்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, இந்தியன் - 2 மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக் லைஃப்’ படங்களின் முன்னோட்ட விடியோக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.