மாளவிகா மோகனனின் தங்கலான் அப்டேட்!
பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தங்கலான்’ படத்தின் புதிய அறிவிப்பைக் கூறியிருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.
பிரபலமான ஈரான் இயக்குநர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் 2017இல் வெளியான பியாண்ட் தி கிளவுட்ஸ் எனும் படத்தில் மாளவிகாவின் நடிப்பு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. தமிழில் நடிகர் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தின் மூலம் நடிகையாக மாளவிகா மோகனன் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் பெரும் வெற்றி பெற்றது. பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதையும் படிக்க: யார் திருடன்..? ஞானவேல் ராஜாவின் அயோக்கியத்தனம்!: கரு.பழனியப்பன்
தங்கலான் படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் வரவுள்ள மாளவிகா, தன் சினிமா வாழ்வில் திருப்பு முனையாக இப்படம் இருக்கும் என எதிர்பார்ப்புடன் இருக்கிறார். இந்நிலையில், தங்கலானுக்காக டப்பிங் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.