செய்திகள்

சுந்தர். சி, அனுராக் காஷ்யப் இணைந்து மிரட்டும் 'ஒன் 2 ஒன்' ஃபர்ஸ்ட் லுக்!

சுந்தர். சி, அனுராக் காஷ்யப் இணைந்து நடித்துள்ள 'ஒன் 2 ஒன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. 

DIN

சுந்தர். சி, அனுராக் காஷ்யப் இணைந்து நடித்துள்ள 'ஒன் 2 ஒன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. 

24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் கே. திருஞானம் எழுதி இயக்கியுள்ள 'ஒன் 2 ஒன்' படத்தில் சுந்தர். சி கதாநாயகனாகவும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. கடும் ஆக்ரோஷத்துடன் சுந்தர்.சி அனுராக் காஷ்யப் இடம்பெற்றிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. 

இந்த படத்தில் ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் அதிரடியாக இதுவரையிலும் இல்லாத ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் சுந்தர். சி நடித்துள்ளார். 

இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் வில்லன் கதராபாத்திரத்தை ஏற்றுள்ளார். 

இவர்களுடன் 'பரமபதம் விளையாட்டு' படத்தில் நாயகன் வேடத்தில் நடித்த விஜய் வர்மன், நடிகை நீது சந்த்ரா முக்கிய பாத்திரத்திலும் ராகினி திவேதி, பேபி மானஸ்வி, ரியாஸ்கான் ஆகியோரும் நடித்துள்ளனர். 

நடிகை திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கே. திருஞானம், விறுவிறுப்பான திரைக்கதையில் கமர்ஷியல் படமாக இதனை இயக்கியுள்ளார்.

இசையமைப்பாளர் சித்தார்த் விபின். படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பாலியல் தொல்லை: அரசு மருத்துவமனை ஊழியா் கைது

திருப்போரூா் கந்தசாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவம் பூத வாகனத்தில் முருகப் பெருமான்

SCROLL FOR NEXT