செய்திகள்

எதிர்நீச்சல் ஒளிபரப்பு நேரம் மாற்றம்! பிக் பாஸ் -7 காரணமா?

அதிக பார்வையாளர்களைக் கொண்ட தொடராக எதிநீச்சல் இருந்து வருகிறது.

DIN

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரில் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

தமிழ் சின்னத்திரை வரலாற்றில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட தொடராக எதிநீச்சல் இருந்து வருகிறது எனலாம். வயது வித்தியாசமின்றி அனைத்துவிதமான ரசிகர்களையும் எதிர்நீச்சல் தொடர் ரசிகர்களாகக் கொண்டுள்ளது. 

குடும்பப் பெண்களை மட்டுமின்றி இளைய தலைமுறையைச் சேர்ந்த பலரும் எதிர்நீச்சல் தொடரை பார்த்துவருகின்றனர். இதன் விளைவாக சின்னத்திரை தொடர்களின் டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து எதிர்நீச்சல் தொடர் முதலிடத்தில் நீடித்து வருகிறது. 

இத்தொடரின் தூணாக இருக்கும் பல பாத்திரங்களில் ஒன்று ஆதி குணசேகரன் பாத்திரம். இந்தப் பாத்திரத்தில் நடித்துவந்த மாரிமுத்து கடந்த மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து இந்த பாத்திரத்தில் அடுத்து நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

மாரிமுத்து மறைவுக்கு பிறகு எதிர்நீச்சல் தொடரின் டிஆர்பி குறையும் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால், தொடர்ந்து தற்போதும் எதிர்நீச்சல் தொடர் முதலிடத்தில் உள்ளது. 

இந்நிலையில், எதிர்நீச்சல் ஒளிபரப்பு நேரம் அரைமணி நேரம் முன்னதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிவந்த நிலையில், இனி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் அனைத்து நாள்களிலும் எதிர்நீச்சல் ஒளிபரப்பாகிறது. 

இரவு 9.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் -7 நிகழ்ச்சி ஒளிபரப்பாவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT