செய்திகள்

நியாயமா லோகேஷ்? சர்ச்சையான விஜய்யின் தகாத வார்த்தை!

லியோ டிரைலரில் இடம்பெற்ற விஜய் வசனம் முகம் சுளிக்க வைப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று (அக். 5) மாலை வெளியானது.

லியோ டிரெய்லர் வெளியானதிலிருந்து 2.7 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது. இதனால், டிரெண்டிங்கில் நீடித்து வருகிறது. 

இந்நிலையில், டிரைலரில் நடிகர் விஜய் கடுமையான தகாத வார்த்தை ஒன்றைப் பேசியிருக்கிறார். முதலில்,  ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தினாலும் தற்போது இது பேசுபொருளாகியிருக்கிறது. பெண்களை இழிவுப்படுத்தும் இந்த வார்த்தையை விஜய் பேசியிருக்கக் கூடாது என்றும் பல குழந்தைகளை ரசிகர்களாக வைத்திருப்பவரிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்றும் ரசிகர்கள் தங்கள் வருத்தத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் தன் முந்தைய படங்களில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தாலும் இந்த முறை கடுமையான வார்த்தையை உபயோகப்படுத்தியிருக்கிறார் என்பதுதான் அதிர்ச்சி அடைய வைத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT