செய்திகள்

லியோவில் இறக்கப்போவது யார்- த்ரிஷா, ப்ரியா ஆனந்த்?: லோகேஷ் கனகராஜ் பதில்!

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் அக். 5ஆம் தேதி வெளியானது. டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கவனம் ஈர்க்கும் சண்டைக்காட்சிகளையும் விஜய்யின் இரு வித்தியாசமான தோற்றத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதுவரை 41 மில்லியன் (4.1 கோடி) பார்வைகளைக் கடந்து டிரெண்டிங்கில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. 

இருப்பினும், டிரைலரில் நடிகர் விஜய் கதாபாத்திரம் தகாத வார்த்தை ஒன்றைப் பேசியிருப்பது சர்ச்சையானது. இதற்கு லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்துள்ளார். 

லியோ போஸ்டரிலும் த்ரிஷா புகைப்படத்துக்கு ரசிகர்கள், “என்ன போஸ்டரிலே த்ரிஷாவை கொலை செய்து விட்டாரே லோகேஷ் ...” என கிண்டலாக மீம்ஸ்களை பதிவிட்டு வந்தனர். 

லோகேஷ் படங்களில் நாயகிகள் என்றாலே இறந்துவிடுவார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இது குறித்து நேர்காணல் ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய லோகேஷ், “இது குறித்து த்ரிஷா மேடமும் என்னிடம் கேள்வி கேட்டார். நானும் ப்ரியா ஆனந்தும் இருக்கிரோம். இருவரில் யாரைக் கொலை செய்ய போகிறீர்கள் எனக் கேட்டார். உங்களது ஆசைக்காகவே யாரையாவது கொலை செய்து விடுவோம் என ஜாலியாக கூறினேன்.

விக்ரம் படப்பிடிப்பில் காயத்ரி...

ப்ரியா ஆனந்த் விக்ரம் படத்திலே நடிக்க வேண்டியது மிஸ் ஆகிவிட்டது. லியோவில் கௌதம் மேனனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்” எனப் பேசினார். படம் வெளியான பிறகே யார் இறப்பார்களென தெரியும். 

முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்திலும் முதலில் ப்ரியா ஆனந்த் நடிக்கவிருந்ததும் பின்னர் சில காரணங்களால் அது கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

லியோ திரைப்படம் அக்.19 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

இளைஞா்களை ஈா்க்க கோயில்களில் நூலகங்கள்: இஸ்ரோ தலைவா் சோமநாத்

SCROLL FOR NEXT