செய்திகள்

வைரலாகும் ஜிகர்தண்டா - 2 படத்தின் முதல் பாடல்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் முதல் பாடலான ‘மாமதுர’ பாடல் வெளியாகியுள்ளது.

DIN

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் முதல் பாடலான ‘மாமதுர’ பாடல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். 

இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி முடித்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் நடித்துள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வருமென படக்குழு தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் முதல் பாடலான ‘மாமதுர’ பாடல் இன்று வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பாடலை தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளனர். பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT