செய்திகள்

ஜென்டில்மேன் - 2 படப்பிடிப்பை தொடக்கிவைத்த தமிழக அமைச்சர்!

ஜென்டில்மேன் - 2 படத்தின் படப்பிடிப்பை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடக்கி வைத்தார்.

DIN

ஜென்டில்மேன் - 2 படத்தின் படப்பிடிப்பை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடக்கி வைத்தார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான ’ஜென்டில் மேன்’ பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜென்டில்மேன் பாடல்கள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

ஜென்டில்மேன் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு விடியோ முன்னதாக வெளியானது.

ஜென்டில்மேன் - 2 படத்தை பிரபல தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கிறார்.  கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார். இசையமைப்பாளர் மரகதமணி (எம்.எம்.கீரவாணி) இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு சேத்தன் சீனு நாயகனாகவும், நயன்தாரா சக்கரவர்த்தி மற்றும் பிரியா லால் ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில், ஜென்டில்மேன் - 2 படத்தின் படப்பிடிப்பை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடக்கி வைத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT