செய்திகள்

நெல்லையில் ரஜினிகாந்தின் 'தலைவர் 170' படப்பிடிப்பு!

நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் 'தலைவர் 170' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

DIN

நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் 'தலைவர் 170' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இசை அனிருத்.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன், ஃபகத் ஃபாஸில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது. 

பணகுடியில் ஆர்.எம்.எஸ் ஓடு தொழிற்சாலையில் நடைபெற்று வரும் படப்பிடிப்புக் காட்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு நடைபெறுவதையொட்டி ஓடு தொழிற்சாலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக காரில் வந்த ரஜினிகாந்த் ரசிகர்களை பார்த்ததும் காரை நிறுத்தி காரில் இருந்தவாறே ரசிகர்களுடன் கைகுலுக்கிவிட்டுச் சென்றார். 

கடந்த 3 நாள்களாக பணகுடி பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கழிப்பறையில் ஹேண்ட் டிரையர்களைப் பயன்படுத்த வேண்டாம்! ஏன்?

2-வது ஒருநாள்: சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா; ஆஸி.க்கு 293 ரன்கள் இலக்கு!

பிரிட்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

உரைவேந்தரின் உரைமாட்சி

அதிவேகம், குறைந்த வயதில் 880 கோல்கள்..! மெஸ்ஸி புதிய சாதனை!

SCROLL FOR NEXT