செய்திகள்

வைரலாகும் ரன்பீர் - ராஷ்மிகா முத்தக்காட்சிகள்!

அனிமல் படத்தின் முதல் பாடலில் இடம்பெற்ற ரன்பீர் - ராஷ்மிகா முத்தக்காட்சிகள் வைரலாகி வருகின்றன.

DIN

2017-ஆம் ஆண்டு அர்ஜுன் ரெட்டி  படத்தை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இதில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்றது. இந்தப்படம் தமிழ், ஹிந்தியில் ரீமெக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பினைப் பெற்றது.  

இந்த இயக்குநரின் புதிய படமான அனிமல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும் நாயகியாக ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர். 

இப்படம் டிச.1ஆம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில்  வெளியாகுமென இயக்குநர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ‘நீ வாடி’ எனும் பாடல் வெளியாகியுள்ளது. அதிக முத்தக்காட்சிகளால் நிறைந்த இப்பாடல் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT