முகப்பு
செய்திகள்

சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் நயன்தாரா?

பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:07 AM
பகிர்:

நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ஜவான் ரூ.1100 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. பாலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்திருக்கிறார். இதனால், அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.

இந்நிலையில், பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ஆலியா பட் - ரன்வீர் சிங்கை வைத்து இயக்கும் ‘பைஜு பாவ்ரா’ படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க, நயன்தாராவிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான ‘கங்குபாய் கத்திவாடி’ 3 தேசிய விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.