செய்திகள்

முடிவுக்கு வந்தது 5 ஆண்டுகள் ஓடிய நெடுந்தொடர்!

இறுதிநாள் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது. இறுதிக்காட்சி என்பதால், தொடரில் இடம்பெற்ற பல முக்கிய பாத்திரங்கள் ஒரே நேரத்தில் நடித்துள்ளனர்.

DIN

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இறுதி நாள் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இறுதி நாளில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குழுவாக எடுத்துக்கொண்ட புகைப்படம் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

விஜய் தொலைக்காட்சியில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. 2018 அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர், 2023 அக்டோபர் மாதம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கரான். வெங்கட் உள்ளிட்ட பலர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தத் தொடரில் நடித்துவந்த சரவணன் விக்ரம் தற்போது பிக் பாஸ் -7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் திருமணம் முடிந்து கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வரும்போது அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளும் அவற்றை எவ்வாறு கடக்கின்றன என்பதே பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையின் திரைக்கதை. 

இந்தத் தொடரில் பல முக்கிய கதாபாத்திரங்கள் அவ்வபோது மாறினாலும், விஜய் தொலைக்காட்சியில் முதல்முறையாக 5 ஆண்டுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பான தொடர் என்ற பெருமையை பாண்டியன் ஸ்டோர்ஸ் பெற்றுள்ளது. 

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இறுதிநாள் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்த அனைவருமே கலந்துகொண்டனர். இறுதிக்காட்சி என்பதால், தொடரில் இடம்பெற்ற பல முக்கிய பாத்திரங்கள் ஒரே நேரத்தில் நடித்துள்ளனர். இறுதிநாள் படப்பிடிப்புக்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இறுதி நாளை படக்குழுவினர் கேக் வெட்டி குழுப்படம் எடுத்து கொண்டாடியுள்ளனர். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும் இடம்பெற்றுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் சின்னத்திரை ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழிபாட்டுக்கு 500 விநாயகா் சிலைகள்

புதுவையில் திமுக மாடல் ஆட்சி அமையும்: தமிழக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா நம்பிக்கை

பெங்களூா் நிறுவனத்துக்கு வோ் ஊக்கி மருந்து அளிக்க புதுவை வேளாண் விஞ்ஞானி முடிவு

ரெயின்போ நகா் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு விழா

வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளி போராட்டம்

SCROLL FOR NEXT