செய்திகள்

திரைப்படமாகும் நிதின் கட்கரியின் வாழ்க்கை

DIN

பாஜக மூத்த தலைவரும், மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்கரியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 'கட்கரி' திரைப்படம் தயாராகி வருகிறது.

அனுராக் ராஜன் என்பவர் இயக்கும் இப்படம் அக்டோபர் 27ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் டீசர் கடந்த திங்கள்கிழமை வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

மராத்தி மொழியில் தயாராகி வரும் இப்படம் மற்ற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர்கள்: ராகுல் சோப்டா, ஐஸ்வர்யா, அபிலாஷ் உள்ளிட்டோர்

இப்படத்தின் இயக்குநர் அனுராக் ராஜன், "நிதின் கட்கரியின் அரசியல் பயணம் குறித்து அனைவரும் அறிந்திருப்போம்.  அதைவிட சுவாரசியமான அவரது இளமைக் காலம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பார்வையாளர்களுக்கு தெரிவிக்கும் நோக்கில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சாதாரண நிலையில் இருந்து இன்று இந்தியாவின் கேபினட் அமைச்சராக உயர்ந்திருக்கும் கட்கரியின் வாழ்க்கைப் பயணம் பலருக்கும் உந்துதலாக இருக்கும்" என்று கூறினார். 

சமீப காலமாக இந்திரா காந்தி, ஜெயலலிதா, மோடி, மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியூஸ் கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

அவள் அப்படித்தான்!

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கேஜரிவால் பேரணி!

குடிநீரில் தேனடை: மனிதக்கழிவு என புகார்!

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள்: இம்முறை..

SCROLL FOR NEXT