திருமண மேடையில் நடிகை ஹர்ஷலா 
செய்திகள்

தொழிலதிபரை மணந்த சின்னத்திரை நடிகை!

சிறகடிக்க ஆசை தொடரில் நடித்துவரும் நடிகை ஹர்ஷலாவுக்கு தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. 

DIN

சிறகடிக்க ஆசை தொடரில் நடித்துவரும் நடிகை ஹர்ஷலாவுக்கு தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. 

நடிகையின் திருமணத்துக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் சிறகடிக்க ஆசை. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் கடந்த வாரம் அதிக டிஆர்பி பெற்ற தொடராக சிறகடிக்க ஆசை தொடர் உள்ளது.

2023 ஜனவரி மாதம்முதல் ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடரில் கோமதி பிரியா, வெற்றி வசந்த் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண், எதிர்பாராத விதமாக குடிப்பழக்கமுள்ள ஓட்டுநரை திருமணம் செய்துகொண்டு சந்திக்கும் சவால்களே சிறகடிக்க ஆசை தொடரின் மையக்கரு.

இந்தத் தொடரில் நடித்துவரும் ஹர்ஷலா, அரவிந்த் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். நீண்ட நாள்களாக இருவரிடையே இருந்த உறவு திருமணமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. 

கணவருடன் நடிகை ஹர்ஷலா

நடிகை ஹர்ஷலா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்திரலேகா தொடரிலும் நடித்து புகழ் பெற்றவர். இதுமட்டுமின்றி தெலுங்கு, கன்னட மொழித் தொடர் மற்றும் நிகழ்ச்சிகளில் ஹர்ஷலா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT