செய்திகள்

விடாமுயற்சி பட கலை இயக்குநர் மிலன் காலமானார் 

விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் சென்ற கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார்.  

DIN

விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் சென்ற கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். 

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் அண்மையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் சென்ற கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் இன்று காலை காலமானார். 

அவருக்கு வயது 54. மிலன், கலாப காதலன் படத்தில் கலை இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து இவர் பில்லா, வீரம், வேதாளம், துணவு, வேட்டைக்காரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

மேலும் சூர்யாவின் கங்குவா படத்திலும் கலை இயக்குநராக மிலன் பணியாற்றி வந்தார். 

இந்த நிலையில் மிலன் மாரடைப்பால் இன்று காலமாகியிருப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 மாவட்டங்களில் இன்று கனமழை!

அபூர்வ ராகங்கள் முதல் Coolie வரை! Superstar Rajinikanth-ன் 50 ஆண்டு திரைப்பயணம்

தமிழக ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு!

கார் கூந்தல்... ஸ்ரீநிதி ஷெட்டி!

கூலி வெற்றிபெற ரஜினி போஸ்டர்களுடன் திருச்சி விநாயகர் கோயிலில் விளக்கேற்றி வழிபாடு!

SCROLL FOR NEXT