செய்திகள்

துருவ நட்சத்திரம் படத்தினை முடிக்கவே நடிக்க ஆரம்பித்தேன்: கௌதம் வாசுதேவ் மேனன்

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் துருவ நட்சத்திரம் படம் முடிக்கவே நடிக்க ஆரம்பித்தேன் எனக் கூறியுள்ளார். 

DIN

கெளதம் வாசுதேவ் மேனன் (ஜிவிஎம்) இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் டீசர் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ரிது வர்மா, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ராதிகா, விநாயகன், திவ்ய தர்ஷினி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ்  இசையமைத்துள்ளார். துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. லியோ படத்துடன் வெளியாகுமென தகவல் வெளியாகி இருந்த நிலையில் படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

இயக்குநராக இருந்த ஜிவிஎம் தற்போது நடிகராகவும் அசத்தி வருகிறார். விஜய்யின் லியோவிலும் நடித்துள்ளார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் ஜிவிஎம், “துருவ நட்சத்திரம் படம் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடைபெறமால் நிற்க காரணம் போதிய அளவு பணமில்லை. இதன் காரணத்தால் நடிக்க ஆரம்பித்தேன். ஆனால் நானாக யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை. அது தானகவே நடந்தது. நடிப்பின் மூலம் கிடைத்த வருவாயில் துருவ நட்சத்திரம் படத்தின் பணிகள் முடிவடைந்துள்ளன” எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் 13,433 மனுக்கள்! ஆட்சியா் தகவல்

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு

பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா தொடக்கம்

மாநில மாநாட்டில் தமிழக அரசியல் நிலைமை குறித்து முடிவு: இரா. முத்தரசன்

திரு.வி.க. நகா் மண்டலத்தில் அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

SCROLL FOR NEXT